மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் என்ற திட்டம் கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு மதுரை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை கொண்டு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், மதுரை டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனி தீர்மானம் இயற்றினார்.
அவர் பின்னர் பேசும்போது, "நான் முதலமைச்சராக இருக்கும் வரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன். என்னையும் மீறி இந்த திட்டம் நிறைவேறினால், ராஜினாமா செய்து விடுவேன்," என்று கூறினார். இந்த நிலையில், முதலமைச்சரின் உரைக்கு கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.