கங்கனாவை அடித்த பெண் போலீசுக்கு இயக்குனர் சேரன் பாராட்டு.. நெட்டிசன்கள் கிண்டல்..!

Mahendran

வெள்ளி, 7 ஜூன் 2024 (14:18 IST)
நடிகை கங்கனாவை அடித்த பெண் போலீசுக்கு இயக்குனர் சேரன் தனது சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகை கங்கனா நேற்று சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த பெண் போலீஸ் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அடித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோவும் இணையதளத்தில் வைரலான நிலையில் கங்கனா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் கங்கனாவை அடித்த பெண் போலீசுக்கு ஒரு பக்கம் பாராட்டுகளும் இன்னொரு பக்கம் கண்டனமும் நெட்டிசன்கள் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் சேரன் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: 
 
இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off..
 
சேரனின் இந்த கருத்துக்கு பலர் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட சேரனால் சொல்ல முடியாது, ஆனால் இதற்கு மட்டும் பொங்கி எழுவார் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்