கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகத்தை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது வேதாரண்யம் முதல் திருவாரூர் வரை உள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூரில் இருந்து சென்னை, திருவள்ளூர் பெல்ட் வரை 10 ஆம் தேதி நண்பகல், மாலை, இரவு தொடங்கி 11 ஆம் தேதி காலை, மதியம், மாலை வரை இடைவிடாமல் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.