சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்.. முழு விவரங்கள்..!

Siva

வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (08:08 IST)
பயணிகளின் தேவை அதிகரித்ததை அடுத்து சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகள் தேர்வு முடிவடையும் நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னை நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குரூப்பில் கூறி இருப்பதாவது:

சென்னை, எழும்பூரில் இருந்து வரும் ஏப்.5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27, 28 தேதிகளில் காலை 5:15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் அதேநாளில் பிற்பகல் 2:10 மணிக்கு நாகர்கோவில் செல்லும். நாகர்கோவிலில் இருந்து ஏப்.5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27, 28 தேதிகளில் பிற்பகல் 2:50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 11:45 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் ஏப்.9, 16, 23, 30, மே 7, 14, 21,28 தேதிகளில் பிற்பகல் 1:30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில், மறுநாள் இரவு 9 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும். மறுமார்க்கமாக ஏப்.10, 17, 24, மே 1, 8, 15, 22, 29 தேதிகளில் இரவு 11:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 3-வது நாளில் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்.

நாகர்கோவிலில் இருந்து ஏப்.7, 14, 21, 28 தேதிகளில் மாலை 4:35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரத்தை அடையும். தாம்பரத்தில் இருந்து ஏப்.8, 15, 22, 29 தேதிகளில் காலை 7:45 மணிக்கு புறப்படும் ரயில் அதேநாளில் இரவு 8:25 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.

ALSO READ: தென் மாவட்டங்களுக்கு செல்லும்.. ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்.. பயணிகள் தவிப்பு.. என்ன காரணம்?

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்