எனது உருவம்...என்னை உருவாக்கியவரின் வியர்வைத் துளிகள்!
எனது புகழ்...மக்கள் கொடுத்த நற்பரிசு!
எனது கடமை...என்னுள் உழைத்துக் கொண்டிருக்கும் பணியாளர்கள்!
குடும்பங்களின் குதூகலத்துடன், சிறார்களின் சிறு கனவுகள்...
ஆடவரின் ஆர்ப்பரிப்புகள்..
மங்கை, மடந்தையகளின் கொண்டாட்டங்கள்...
மணமக்களின் மகிழ்ச்சிகள்...
என எல்லாம் அரங்கேறும் அரண்மனை நான்....
அனைத்தும் அறிந்த தீயே... மறந்தும் என்னை தழுவலாமா?
நொறுங்கியது நான் மட்டுமல்ல...கணக்கில்லா இதயங்களும் தான்....
விரைவில் உன்னையும் அழைப்போம் இந்த இடத்திற்கு...
கணபதி ஹோமமாய்....