பொதுவாக சாலைகளில் எண்ணெய்ப்படலங்கள் இருந்தால் மழை பெய்யும்போது அது தானாகவே அகன்றுவிடும். ஆனால் நேற்றிரவு சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக மழை நின்றவுடன் சாலைகளில் எண்ணெய்ப்படலங்கள் அதிகளவு காணப்பட்டது. குறிப்பாக சென்னை கோடம்பாக்கம் முதல் வடபழனி வரையுள்ள சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, மற்றும் நகரத்தில் இருக்கும் பல்வேறு சாலைகளில் எண்ணெய் படலம் காணப்பட்டது
இதை கவனிக்காத இருசக்கர வாகன ஓட்டிகள் திடீர் திடீரென வழுக்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்த போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் சாலைகளில் மணல் கொட்டும் பணியும் நடைபெற்றது. சென்னை சாலைகளில் திடீரென எண்ணெய்ப்படலம் ஏற்பட என்ன காரணம் என்று தெரியவில்லை