பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்தில், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த அருண் ஐபிஎஸ், புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.