ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வரும் சூழலில் நாளையும் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை செண்ட்ரல் - கூடுர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 21 மின்சார ரயில்கள் நாளை (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை செண்ட்ரலில் இருந்து 5.40, 8.35 மற்றும் 10.15க்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்தாகிறது. அதேபோல சூலூர்பேட்டையில் இருந்து காலை 10.00, 11.45, 12.35 மற்றும் 1.15 மணிக்கு புறப்பட்டு சென்னை செண்ட்ரல் வரும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை செண்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 8.05, 9.00, 9.30, 10.30 மற்றும் 11.35 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து. கும்மிடிப்பூண்டி - சென்னை செண்ட்ரல் வழித்தடத்தில் 9.55, 11.25, 12.00, 1.00 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி செல்லும் 9.40 மணி ரயில் ரத்து. கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை 10.55 ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டை - நெல்லூர் செல்லும் 8.10 மணி பயணிகள் ரயில் ரத்து. நெல்லூர் - சூலூர்பேட்டை செல்லும் 10.20 மணி ரயிலும் ரத்தாகிறது. ஆவடி - சென்னை செண்ட்ரல் 4.25 மணி ரயில் ரத்து.
இதனால் நாளை 17ம் தேதி செண்ட்ரல் - பொன்னேரி இடையே 9 மணிக்கும், செண்ட்ரல் - மீஞ்சூர் இடையே 9.30, 10.30 மணிக்கும், மீஞ்சூர் - செண்ட்ரல் இடையே காலை 11.56, 1.31 மணிக்கும், பொன்னேரி - செண்ட்ரல் இடையே 12.18 மணிக்கும், செண்ட்ரல் - எளாவூர் இடையே காலை 11.35 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K