அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

Mahendran

சனி, 20 ஜூலை 2024 (11:05 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்மேற்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வர பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி  ஆகிய பத்து மாவட்டங்களில் டுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று இந்த 10 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்