அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (07:43 IST)
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கோவை,  நீலகிரி மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தினமும் மழை குறித்த விவரங்களை அளித்து வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்