முழுக்க முழுக்க வதந்தி: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வியாழன், 7 ஜூலை 2022 (18:34 IST)
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு கருத்தை முழுக்க முழுக்க வதந்தி என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில மணி நேரக்களாக சமூகவலைதளங்களில் சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் அதிகப்படியான குளிர்காலம் இருக்கும் என்றும் அதனால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் செய்தி பரவி வருகிறது
 
இந்த செய்தி முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது என்றும் முழுக்க முழுக்க வதந்தி என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு அதிக குளிர் உணரப்படும் என்ற செய்தி உண்மையானது அல்ல என்றும் பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்