15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

செவ்வாய், 4 அக்டோபர் 2022 (14:57 IST)
அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்கள் இதோ:  கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்