வெறிச்சோடி காணப்படும் சென்னை

திங்கள், 5 டிசம்பர் 2016 (19:49 IST)
ஜெயலலிதா குறித்து பரவிய வதந்தியை தொடர்ந்து சென்னை முழுவதும் உள்ள கடைகள், பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி நிலையில் உள்ளது.


 

 
சற்றுமுன் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் பரவியது. பின்னர் அது வதந்தி என்றும், ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.
 
இதற்கிடையில் சென்னை முழுவதும் அனைவரும் அவர்களது வீடுகளுக்குச் செல்ல தொடங்கினர். அதோடு கடைகள், பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், என அனைத்தும் மூடப்பட்டது. மேலும் திரையரங்கம் கூட மூடப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்