1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு ரூ.1 லட்சம்: சென்னை கேந்திரியா வித்யாலா பள்ளி முதல்வர் கைது

செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (08:24 IST)
எல்.கே.ஜி உள்பட ஆரம்ப வகுப்புகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பணம் பெறுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்த  நிலையில் சென்னை கேந்திரியா பள்ளி முதல்வர் ஆனந்தன் என்பவர் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு ஒரு மாணவரின் பெற்றோரிடம் இருந்து ரூ. 1 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகார் காரணமாக சென்னை கேந்திரியா பள்ளி முதல்வர் ஆனந்தன் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கேந்திரியா வித்யாலாய பள்ளி முதல்வர் ஆனந்தன் மாணவர் சேர்க்கைக்கு  பணம் பெறுவதாக ஏற்கனவே சிபிஐக்கு புகார் வந்த நிலையில் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பள்ளி முதல்வரை கண்காணித்து வந்ததாகவும், இன்று சிபிஐ வைத்த பொறியில் சிக்கி பெறும்போது கையும் களவுமாக ஆனந்தன் பிடிபட்டதாகவும் சிபிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலாய பள்ளிக்கு முன் பெற்றோர்கள் குவிந்துள்ளனர். முதல்வர் ஆனந்தன் மீது இன்னும் பல பெற்றோர்கள் புகார் அளிக்க முன்வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்