சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியது தவறு என்று தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.