அமைச்சர் பெரியகருப்பன் மீதான மூன்று வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (18:22 IST)
அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது
அமைச்சர் பெரியகருப்பன் மீது மூன்று வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது
நீட் தேர்வை எதிர்த்து போராடியது குறித்த வழக்கு, தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியதாக வழக்கு, மற்றும் அனுமதி இல்லாமல் கட்சி அலுவலகத்தை திறந்து என மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த மூன்று வழக்குகள் கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது