ஆசிரியர்கள், மாணவர்கள் தமிழில் கையெழுத்து போட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (11:16 IST)
ஆசிரியர்கள், மாணவர்கள் தமிழில் கையெழுத்து போட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழில்தான் கையெழுத்து போட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் போடவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பெயரின் முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்யவேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தமிழக அரசின் முழு கொள்கையைச் செயல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை இந்த உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த உத்தரவை அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்