ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும், ராஜகண்ணப்பன் வழக்கு தள்ளுபடி! – நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:58 IST)
கடந்த 2009ல் மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலின்போது சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரமும், அதிமுக வேட்பாளர் ராஜக்கண்ணப்பனும் போட்டியிட்டனர். இந்நிலையில் தோராய வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுகவின் ராஜக்கண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடந்து வந்த நிலையில் போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படாததால் வழக்கை தள்ளுபடி செய்து ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்