முதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்

புதன், 23 ஜனவரி 2019 (20:37 IST)
கொட நாடு கொலை, கொள்ளை குறித்து தமிழக முதல்வரை சம்பந்தப்படுத்தி பேச தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் ஆதாரம் இல்லாத ஆவணங்களையும் அவர்கள் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சமீபத்தில் மனோஜ், சயன் ஆகியோர்களிடம் பேட்டி எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சர்ச்சைக்குரிய வகையில் மனோஜ், சயன் பேசியவை இருந்தது. இதனையடுத்து  சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதுகுறித்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் மேத்யூஸ் சாமுவேல் பேட்டியளித்து வருவதாக முதல்வர் சார்பில் மனு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மேத்யூ சாமுவேல், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேர் முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேச நீதிபதி தடை விதித்ததோடு, ஆதாரமில்லாமல் ஆவணங்களை வெளியிடவும் தடை விதித்தார். மேலும் இந்த வழக்கு ஜனவரி 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்