சென்னையில் நடுரோட்டில் பைனான்சியர் வெட்டிக்கொலை: வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

வெள்ளி, 20 மே 2022 (12:05 IST)
சென்னையில் நடுரோட்டில் பைனான்சியர் வெட்டிக்கொலை: வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
சென்னையில் நடு ரோட்டில் பைனான்சியர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட போது பொதுமக்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை அமைந்தகரையில் பைனான்சியர் ஆறுமுகம் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து  சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் 
 
அதன் பின் அவர்கள் இரு சக்கர வாகனங்களில் தப்பி ஓடிவிட்டனர். சாலையின் இருபக்கமும் பரபரப்பாக வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தபோது நடுரோட்டில் பைனான்சியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்