பொறியியல் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை தேதி அறிவிப்பு!

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (19:32 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது என்பதும் விரைவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏற்கனவே பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை குறித்த தகவல் வெளிவந்துள்ளது 
 
பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்கள் நேரடியாக இரண்டாம் வகுப்பில் ஆகஸ்ட் 10 முதல் சேர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்