”அம்மா” பெயர் இருப்பதால் மூடிவிட்ட்டார்கள்! – எடப்பாடியார் கண்டனம்!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:32 IST)
அம்மா மினி க்ளினிக்குகள் மூடப்படுவதாக வெளியான அறிவிப்புக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களும் மருத்துவ வசதி பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதில் செவிலியர்கள் பணி அமர்த்தப்படாததால் அது செயல்படாமல் இருந்ததாகவும், ஒரு ஆண்டுகாலம் தற்காலிகமாக தொடங்கப்பட்ட அம்மா க்ளினிக்குகள் மூடப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர், இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “அம்மா பெயர் உள்ளது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மினி கிளினிக் திட்டம் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை திமுக அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்