சென்னையில் குறையும் கொரோனா; 4 தெருக்கள்தான் மிச்சம்! – சென்னை மாநகராட்சி!

திங்கள், 2 நவம்பர் 2020 (16:04 IST)
கடந்த சில மாதங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. பின்னர் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் சென்னைக்கு மட்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகளும் படிபடியாக குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தற்போது தினசரி பாதிப்புகள் 700க்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் மணலியில் 3 தெருக்களும், சோழிங்கநல்லூரில் ஒரு தெருவுமாக மொத்தம் 4 தெருக்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்