கும்பலாக சுத்துவோம்.. பேருந்தில் ரகளை செய்த மாணவர்கள்! – பிரித்து அனுப்பிய காவல்துறை!

செவ்வாய், 5 அக்டோபர் 2021 (09:03 IST)
சென்னையில் ஒரே பேருந்தில் கூட்டமாக ஏறி சத்தம் போட்டு சென்ற மானவர்களை போலீஸார் தனித்தனி பேருந்துகளில் பிரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

சென்னையில் குறிப்பிட்ட கல்லூரி வழித்தடங்களில் பேருந்துகளில் மாணவர்கள் கூட்டமாக செல்வதும், சத்தம் போட்டு, பாட்டு பாடி செல்வதும் தொடர்ந்து வருகிறது. இது போன்ற செயல்கள் பேருந்தில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு சங்கடத்தை அளிக்கிறது.

இந்நிலையில் நேற்று பிராட்வேயிலிருந்து எம்.எம்.டி.ஏ காலணி செல்லும் பேருந்தில் இதுபோல சுமார் 45 மாணவர்கள் ஏறிக் கொண்டு சத்தமிட்டப்படி சென்றுள்ளனர். இந்த சத்தம் பேருந்து கடந்த சென்ற கீழ்பாக்கம் காவல் நிலையம் உள்ளே வரை கேட்டுள்ளது. இதனால் உடனடியாக பேருந்தை நிறுத்திய காவலர்கள் மாணவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

பின்னர் மாணவர்களை 5 நபர்களாக பிரித்து தனித்தனி பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்