சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 38 மயானங்கள் உள்ளன. முதலில் மயானத்தில் கட்டண தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் மயான பொறுப்பாளர்கள் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி மயானங்களில் உடல்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் இலவசம் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள மின் மயானங்கள் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சென்னை அண்ணாநகர், வேலங்காடு பகுதியில் உள்ள மின் மயானத்தில், தமிழகத்தில் முதன் முறையாக சுடுகாட்டில் வைஃபை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.