இந்நிலையில், இந்த விஷயத்தில் கேமரா வைத்திருப்பது எப்படி கண்டறியப்பட்டது அந்த காமுகன் எப்படி சிக்கினான் என்ற தகவல் கிடைத்துள்ளது. சம்பத்ராஜ் திருச்சியில் இருந்து சென்னை வந்தவர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வீட்டை ஹாஸ்டலாக மாற்றி அதை இரண்டு மாதங்களாக நடத்தி வருகிறார்.
குறிப்பிட்ட நாளில், பாத்ரூமிலுள்ள பிளக் சாக்கெட்டில், ஹாஸ்டலில் தங்கியிந்த பெண் ஒருவர் ஹேர்டிரையர் பிளக்கை சொருக முயற்சித்துள்ளார். ஆனால், பிளக் செய்ய முடியவில்லை. இதனால், சாக்கெட்டை கழற்றி சரி செய்ய முயன்றுள்ளார். அப்போதுதான் கேமரா இருப்பது தெரியவந்துள்ளது.
இன்னும் சிலர், விடுதியில் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் நடந்து வந்ததால் ரூமில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்குமோ என சந்தேகித்து மொபைலில் ஹிட்டன் கேமரா டிடக்டர் செயலியை பதிவேற்றம் செய்து சோதனை செய்ததில் இந்த விவகாரம் தெரிய வந்தது எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.