ஆக்ஸிஜன் பற்றாக்குறை உயிரிழப்பு விவகாரம்! – செங்கல்பட்டு மருத்துவர்கள் போராட்டம்!

புதன், 5 மே 2021 (13:12 IST)
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்தது குறித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லையென்றும், வேறுசில தொழில்நுட்ப காரணங்களே என்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

ஆனால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளது என்றும், தேவையான ஆக்சிஜனை வழங்குமாறும், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்து செங்கல்பட்டு மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்