தட்கல் கட்டணம் கிடையாது - ரயில்வே அறிவிப்பு!

செவ்வாய், 23 நவம்பர் 2021 (12:45 IST)
இந்திய ரயில்வே வாரியம் அனைத்து சிறப்பு ரயில்களும் வழக்கமான கட்டணத்தில் வழக்கமான ரயில்களாகவும் வழக்கமான ரயில் எண்களிலும் இயக்கலாம் என அனுமதி அளித்தது.

 
இந்தியா முழுவதும் கொரொனாவால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் மட்டும் செயல்பட்டு வந்தன. தற்போது அனைத்து ரயில்களும் கிட்டத்தட்ட செயல்பட தொடங்கியுள்ள நிலையில் சிறப்பு ரயில்களை வழக்கமான ரயில்களாக மாற்றுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
எனவே வழக்கமான ரயில் எண், கட்டண விதிப்பு போன்றவற்றை முன்பதிவு வதியிலும் மாற்ற வேண்டிய பணிகள் தொடங்க உள்ளது. இதனால் கடந்த 14ம் தேதி தொடங்கி வருகிற 21ம் தேதி வரை இரவு 11.30 முதல் காலை 5.30 மணி வரை இரவு நேரத்தில் மட்டும் முன்பதிவு சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து போன்றவற்றை செய்ய இயலாது என கூறப்பட்டுள்ளது.
 
தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்துவிட்டதால் புதிதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக மாற்றப்பட்டு, சாதாரண கட்டணமே வசூலிக்கப்படும் என கூறியுள்ளது.
 
அதாவது, தெற்கு ரெயில்வே மண்டலம் சென்னையில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில் 39 விடுமுறை கால மற்றும் பண்டிகை கால சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணம், தட்கல் கட்டணத்திலிருந்து, வழக்கமான கட்டணமாக மாற்றப்பட்டு உள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்