அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு!

வியாழன், 8 ஜூன் 2017 (11:12 IST)
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஒன்று தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
கடந்த 1996-ஆம் ஆண்டு சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
நீண்ட காலமாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி மலர்மதி முன்னிலையில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவானது. கோடநாடு எஸ்டேட் பங்குகளை போலி நிறுவனம் மூலமாக வாங்கியதாக குற்றச்சாட்டு.
 
இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜரான டிடிவி தினகரன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து தான் தவறு ஏதும் செய்யவில்லை என்றார். இதனையடுத்து நீதிபதி மலர்மதி வழக்கின் விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்