கடந்த சில நாட்களுக்கு முன்பு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் சொகுசாக வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானதையடுத்து, டிஐஜி முருகேசன் தலைமையிலான போலீஸார் சோதனை செய்தபோது அங்கு உயர்ரக டிவி, அரிசி, கட்டில் போன்றவை சிக்கியுள்ளது.
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்டு அவர்கள் செய்த குற்றத்துக்கு தன்னை மனதளவில் திருத்திக் கொள்வதற்காகத்தான் சிறையில் அடைக்கப்படுவது. ஆனால் இதற்கு மாறாக சில வசதியான கைதிகள் சிறைத்துறை அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு,ஜெயிலுக்கு வந்து தண்டனை காலத்தில் விருந்தினர் போல அனைத்து சொகுசு வசதிகளையும் பெற்று வருகின்றனர் என்ற அச்சமே மக்கள் மனதில் உண்டாகியுள்ளது.