தமிழகத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எழும்பூர் ரயில் நிலையத்தில் மூன்று நபர்களிடமிருந்து நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் அந்த பணம் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி தொகுதிக்காக எடுத்து செல்வதாக அந்த மூன்று நபர்கள் வாக்குமூலம் அளித்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிசிஐடி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெறுவதாகவும் அந்த விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டும் என்றும் அந்த சம்மனில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.