களத்தில் இறங்கிய சிபிசிஐடி: நீதி கிடைக்குமா தந்தை - மகன் மரணத்திற்கு...?

புதன், 1 ஜூலை 2020 (10:08 IST)
தந்தை - மகன் வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் 10 சிபிசிஐடி குழுவினர் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். 
 
சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை மதுரை கிளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. 
 
இந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அன்று அந்த காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலரின் வாக்குமூலமும், உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையை முன் வைத்து போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
எனவே, சாத்தான்குளம் காவல் நிலையம், ஜெயராஜ் வீடு ஆகிய இடங்களில் சிபிசிஐடியைச் சேர்ந்த 10 குழுவினர் இன்று விசாரணை மேற்கொள்கின்றனர். சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையிலான காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்கின்றனர் என தகவல் கிடைத்துள்ளது. 
 
மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2 ஆவது நாளாக தடயங்களளும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதோடு புகாருக்குள்ளான எஸ்.ஐ.க்கள் கைது செய்யப்பட நெருக்கடி வலுப்பதால் இரு எஸ்.ஐ.க்களும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்