மாஃபா பாண்டியராஜன் மீது வழக்கு: ஜெ. பிணத்தை வைத்து பிரச்சாரம் செய்ததில் தேசியக்கொடி அவமதிப்பு!

திங்கள், 10 ஏப்ரல் 2017 (09:48 IST)
ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் பிணத்தை போன்ற மெழுகு சிலையை வைத்து பிரச்சாரம் செய்தனர் ஓபிஎஸ் அணியினர். இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனங்கள் தெரிவித்தனர்.


 
 
ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவத்தில் மெழுகு பொம்மை செய்து அதனை சவப்பெட்டியில் வைத்து அதன் மேல் தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு, தலைவர்களின் கண்டனங்கள் வர தேர்தல் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்தது.
 
இதனையடுத்து தேசியக்கொடி நீக்கப்பட்டு அந்த பிரச்சார யுக்தி கைவிடப்பட்டது. ஓபிஎஸ் தரப்பும் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டது. சவப்பெட்டியுடன் ஜெயலலிதாவின் அந்த மெழுகு உருவ பொம்மை செய்ய 6.5 லட்சம் செலவானதாக தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓபிஎஸ் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் அங்கு இருந்தார். இதனையடுத்து தேசியக்கொடியை வைத்து பிரச்சாரம் செய்ததற்காக மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட ஓபிஎஸ் அணியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்