தமிழகத்தில், அதிமுகவுக்கு ஜெயா டிவி, திமுகவுக்கு கலைஞர் டிவி, பாகமவுக்கு மக்கள் தொலைக்காட்சி உள்ளது போல், தேமுதிகவுக்கும் கேப்டன் டிவி மற்றும் கேப்டன் நியூஸ் ஆகிய இரு சேனல்கள் உள்ளன. இந்த சேனல்கள் தேமுதிக பிரசார பீரங்கியாக செயல்பட்டு வருகிறது.
தேமுதிக மாநில மாணவர் அணி துணைச் செயலருமான வழக்கறிஞர் எஸ். சங்கர், கேப்டன் டிவியின் பங்குதாராக உள்ளார். இந்த நிலையில், தேமுதிகவுக்கு முழுக்கு போட்டு, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். இதனால், இனி கேப்டன் டிவியில் தேமுதிகவுக்கு ஆதரவாக ஒளிபரப்பு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.