அரசு கேபிள் டிவியில் ஜெயலலிதா படம்: கில்டு பாண்டி பரபரப்பு புகார்

திங்கள், 1 பிப்ரவரி 2016 (00:20 IST)
டிவியில் ஜெயலலிதா படம் சர்ச்சையில், அரசு கேபிள் டெக்னீஷியன்கள் மீது கில்டு பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து, மதுரை கேபிள் டிவி கில்டு அமைப்பைச் சேர்ந்த பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
அரசு கேபிள் டிவி நிர்வாகம் வெளியிடாத தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்ட, செட்டாப் பாக்ஸ் படத்தை, வாட்ஸ்அப், முகநூல், மூலம் வெளியிட்டு, கேபிள் ஆப்ரேட்டர்களையும், பொது மக்களையும், குழப்பி வருகின்றனர். இந்த குழப்பத்திற்கு காரணமான  அரசு டெக்னீசியன்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்