ஜெ.வின் மறைவிற்கு பின், சசிகலாவின் ஆதரவாளராக சி.ஆர்.சரஸ்வதி மாறியுள்ளார். சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கிய பின், ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவாக மக்கள் மனநிலை மாறியது. மேலும், சசிகலாவிற்கு ஆதரவாக நிற்கும் பெரும்பாலான அதிமுக நிர்வாகிகளின் செல்போனுக்கு ஏராளமானோர் தொடார்பு கொண்டு அசிங்கமாகவும், கோபமாகவும் பேசுவதாகவும் புகார் எழுந்தது. இதனால், கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் தங்கள் செல்போனை அணைத்து வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சி.ஆர்.சரஸ்வதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், இரவு 10 மணிக்கு மேல் ஏராளமானோர் என்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுகின்றனர். மேலும், ஆபசமாகவும் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லாமல், வெளி மாநிலங்களிலிருந்து என்னை தொடர்பு கொண்டு திட்டுகிறார்கள்.
அதேபோல் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் நடிகை விஜயசாந்தி ஆகிய அனைவரின் செல்போனிலும் ஏராளமானோர் மிரட்டல் விடுகின்றனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.