அ.தி.மு.க அதிரடி! 20 -பது தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்

திங்கள், 29 அக்டோபர் 2018 (14:19 IST)
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த 18 தொகுதிகளும் காலி என்று அறிவிக்கப்பட்டால் எந்த நேரத்திலும் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக ஆளும்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த 18 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
 திருவாரூர் தொகுதிக்கு அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட மூவர் நியமனம். நியனம்
 
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஆ.ர்.பி.உதயகுமார். செல்லூர்ராஜூ உள்ளிட்ட 7 பேர் பொறுப்பாளர்கள் நியமனம்.
 
அரவகுறிச்சி தொகுதியில் அதிமுக எம்.பி.தம்பிதுறை அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், வெல்லாமாண்டி  நடராஜன் உட்பட 8 பேர் நியமனம்.
 
பெரம்பூருக்கு மதுசூதனன் ஜெயக்குமார் நியமனம்.
 
மேலும் எஸ்பி.எம்.சையதுகான், ஆர்.பார்த்தசாரதி, ஆகியோரும் ஆண்டிபட்டி தொகுதிக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பெரியகுளம் ஆகிய  தொகுதிகளுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான குழுவில்  முருகுமாறன், சுப்புரத்தினம் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம்.
 
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு ஓபிஎஸ் திண்டுக்கல் சீனிவாசன் ஜக்கையன் விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்