பாரசூட் சாகசப் பயிற்சியில் தவறி விழுந்து தொழிலதிபர் பலி

திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (11:07 IST)
கோயம்புத்தூரில் நடைபெற்ற பாரசூட் சாகசப் பயிற்சியில் தவறி விழுந்து தொழிலதிபர் ஒருவர் பலியானார்.
 

 
கோயம்புத்தூர் கொடீசியா வளாகத்தில் கோவை அரசு மருத்துவ கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி ‘இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்டு சயின்ஸ்’ என்ற அமைப்பின் சார்பில் பாராசூட்டில் பறக்கும் ‘பாரா செயிலிங்’ என்ற வான் சாகச விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 
இதில் பீளமேட்டைச் சேர்ந்த மல்லேஸ்வர ராவ் என்ற தொழிலதிபரும் பங்கேற்றிருந்தார். சாகசத்தின் போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் சுமார் 60 அடி உயரத்தில் இருந்து மல்லேஸ்வரராவ் கீழே விழுந்தார்.
 
படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்