அண்ணி மீது மோகம்: திருமணம் செய்ய கடத்திய கொழுந்தனார்!

சனி, 3 டிசம்பர் 2016 (14:29 IST)
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே மனைவியின் அக்கா மீது காதல் கொண்ட ஒருவர் அவரை இரண்டாவது திருமணம் செய்ய காரில் கடத்திய சம்பவம் நடந்துள்ளது.


 
 
புதுக்கோட்டை அருகே வடக்கு காலாங்கரையை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் கம்ப்யூட்டர் செண்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சர்மிளா. சர்மிளாவின் அக்கா சியாமளா. இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
 
ஐய்யப்பனுக்கு மனைவியின் அக்கா சியாமளாவை இரண்டாவதாக திருமணம் செய்ய விருப்பம். இதனை அவரிடமும் கூறியுள்ளார். ஆனால் சியாமளா இதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சியாமளாவை ஐய்யப்பன் காரில் சென்று சிலருடன் சேர்ந்து கடத்தியுள்ளான்.
 
வேகமாக சென்ற கார் கோவில்பட்டி அருகே வேகத்தைடையில் மெதுவாக செல்லும் போது சியாமளா காரின் கதவை திறந்து குதித்து தப்பியுள்ளார். அங்கு சிவகாசி செல்வதற்காக நின்ற பஸ்ஸில் சியாமளா ஏற ஐயப்பனும் அந்த பேருந்தில் ஏறி சியாமளாவின் கையை பிடித்து வெளியே இழுத்துள்ளார்.
 
ஆனால் சியாமளா பஸ்ஸில் கத்த அங்கு இருந்து பெண் போலீஸ் ஒருவர் ஐயப்பனிடம் விசாரணை நடத்தியுள்ளார். அதில் ஐயப்பன் சரியான பதிலை சொல்லாததால் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். இதனையடுத்து காரில் இருந்து தப்பிய 5 பேர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்