நிச்சயம் செய்யப்பட்ட பெண் தற்கொலை.. விரக்தியில் மணமகனும் தற்கொலை..!

புதன், 19 ஏப்ரல் 2023 (10:19 IST)
சென்னை அருகே நிச்சயம் செய்யப்பட்ட மணப்பெண் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து விரக்தியில் மணமகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மாம்பாக்கம் பகுதியில் கார்த்திக் என்ற 28 வயது இளைஞருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட பெண் திடீரென நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை 
 
இந்த நிலையில் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட திவ்யா தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கார்த்திக் திடீரென இன்று தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்த நாளில் திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்பட்ட மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவருமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு வீட்டார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்