70 அடி உயர மெட்ரோ தூணில் சிக்கிய நாய் பத்திரமாக மீட்பு : மீனம்பாக்கத்தில் பரபரப்பு

வியாழன், 30 ஜூன் 2016 (14:36 IST)
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே, மெட்ரோ ரயில் பணிக்காக அமைக்கப்பட்ட 70 அடி உயர தூணில் ஒரு நாய் எப்படியோ ஏறி, இரு தூண்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. கடந்த 2 நாட்களாக அந்த நாய் அந்த இடத்திலேயே கத்திக் கொண்டு இருந்தது.


 

 
அதைக் கண்ட அந்த பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள், இதுபற்றி கிண்டியில் உள்ள புளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற புளு கிராஸ் அமைப்பினர், ஆட்டோ ஒட்டுனர்களின் உதவியிடன் நாயை காப்பற்ற திட்டமிட்டனர்.
 
காப்பாற்றும் முயற்சியில், நாய் மேலே இருந்து குதித்தால் அதற்கு அடி படும் என்பதால், முன் எச்சரிக்கையாக தூணின் அடியில் அனைவரும் வலையை பிடித்து நின்று கொண்டனர். 
 
அதன்பின், புளூ கிராஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் மேலே சென்று அந்த நாயை பிடிக்க முயன்றார். அவரைப் பார்த்ததும், அந்த நாய் பயத்தில் அங்கிருந்து கீழே குதித்தது. சரியாக வலையிலேயே அந்த நாய் குதித்ததால், நாய்க்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அதன்பின் அந்த நாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்