மூத்த பொறியாளரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற தமிழறிஞர்கள் !

செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (21:19 IST)
கரூரில் பொறியாளர் தின விழாவினையொட்டி கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் காந்திகிராமம் ஷைன் சங்கம் சார்பில் மூத்த பொறியாளருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது  காலில் விழுந்து தமிழறிஞர்கள்ஆசிர்வாதம் பெற்றனர்.

கருவூர்  திருக்குறள்  பேரவை காந்திகிராமம் ஷைன் லயன் சங்கம் சார்பில்  பொறியாளர் தினத்தினை முன்னிட்டு  தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன்., அரிமா மண்டலத்தலைவர் சுப்பிரமணிய பாரதி.,  தமிழிசைச் சங்க நிர்வாகி க.ப.பாலசுப்ரமணியன்.,  காந்தி கிராமம் ஷைன் சங்கம் சீனிவாசபுரம்  ரமணன்  ஆகியோர்  கரூர் நகரின்  மூத்த பொறியாளர்களுள் ஒருவரும்  டாக்டர்  பட்டம்  பெற்றவருமான  என்.ஆர். அசோசியேட்ஸ் பொறியாளர்  N. ராமனாதன்  அலுவலகம்  சென்று நூலாடை  அணிவித்ததோடு, அலுவலகத்தில் பணிபுரிந்த மற்ற  சக பொறியாளர்கள்  ஜனார்த்தனன்,  சரவணன்  கார்த்திக்,  அனிதா,  அபிஷேக், ஜிவிதா ஆகியோரையும்  பாராட்டினர்.

மேலும், இந்நிகழ்ச்சியில்., மேலை பழநியப்பன்  உலக  அரங்கில்  நம்  பெருமையை நிலை நாட்டுபவற்றுள்  கலையும்  ஒன்று  கட்டிடக் கலை  அந்தக்  கலையில் உள்ளடங்கியது. அக்கலையை  மிகச்  சிறப்பாக  நல்ல  புகழுடன்  செய்து வருபவர்  பொறியாளர்  ராமனாதன்  என்று கருவூர் திருக்குறள் பேரவையின் நிறுவனர் மேலை.பழநியப்பன் கூறினார்.

மேலும்., பொறியாளர் ராமனாதன்  ஏற்புரையில்  அனைத்து  பொறியாளர்களையும் உறுதி ஏற்க  அழைத்து  கட்டிடம்  கட்டும்  போது  தரமான  பொருட்களை பயன்படுத்துவோம் சுற்றுச் சூழலை  பேணுவதற்கு மரம் நட்டு வளர்ப்போம் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்ட இலவச ஆலோசனை வழங்குவோம் என உறுதி ஏற்றனர் . விழா முடிவில் மூத்த பொறியாளர் ராமநாதன் காலில், கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை.பழநியப்பன் அவர்கள் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்