ஆற்றில் குளிக்கச் சென்ற வங்கி ஊழியர் மற்றும் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி

புதன், 11 செப்டம்பர் 2019 (21:23 IST)
கரூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற வங்கி ஊழியர் மற்றும் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி. காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் காவல் சரகம் எல்லைக்குட்பட்ட புதுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் குளிப்பதற்காக.,  கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ராயனூர் பகுதியில் செயல்படும் பல்லவன் கிராம வங்கியில் பணியாற்றி வந்த சூரிய பிரகாஷ் வயது 23, இவரது நண்பர் கார்த்திக் ராஜா வயது 19 தனியார் கலைக்கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.

இதே போல் அவரது நண்பர் அக்பர் உசேன் வயது 20 .இவர்கள் 3 பேரும் குளிக்க காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளனர். இதில் அக்பர் உசேன் மட்டும் குளிப்பதற்கு ஷாம்பு வாங்க கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு திரும்பி வந்து காவிரி ஆற்றில் பார்க்கும்பொழுது, வங்கி ஊழியர் சூரிய பிரகதீஸ்சும், கல்லூரி மாணவர் கார்த்திக் ராஜாவும் நீரில் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நீரில் மூழ்கி பலியாகியதாக தொடர்ந்து தீயணைப்பு துறையினரும் அருகில் இருந்த ;பொதுமக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது.,வங்கி ஊழியர் சூரிய பிரகதீஸ் உடல் மட்டும் மீட்கப்பட்டது .

கல்லூரி மாணவனின் உடலை தேடும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 3 மணி நேரமாக அந்த கல்லூரி மாணவரின் உடம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்