தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக வளரும் - பாஜக தேசிய செயல் தலைவர் !

சனி, 30 நவம்பர் 2019 (14:12 IST)
இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பாஜக தேசிய செயல் தலைவர் ஜேபி.நட்டா, தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக வளரும் என தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயலர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர், காணொளி மூலம் 15 பாஜக மாவட்ட தலைமை அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
 
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக வளரும் என தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ராதாரவி இன்று, ஜே.பி.நட்டா முன்னிலையில் பஜாகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்