போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான குற்றங்களுக்காக இந்தியா முழுவதும் கைது செய்யப்பட்ட சுமார் 16,000 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மத்திய உள்துறை அமைச்சகம் தயாராகி வருகிறது. இது, போதைப்பொருள் கடத்தல் மீதான மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த வெளிநாட்டவர்கள், போதைப்பொருள் கடத்துதல் மற்றும் விநியோகித்தல் போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்தியா நாடு கடத்த உள்ள வெளிநாட்டவர்களில் வங்கதேசம், பிலிப்பைன்ஸ், மியான்மர், மலேசியா, கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியல் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய குடியேற்ற சட்ட விதிகளின்படி இந்த நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.