தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடையா? பிள்ளையாருக்காக குரல் கொடுக்கும் முருகன்!

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (14:46 IST)
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை அனுமதிப்பது குறித்து தமிழ்நாடு அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வீதிகளில் சிலை அமைத்த, ஊர்வலம் செல்லுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. மக்கள் அவர்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
அரசின் இந்த அறிவிப்பிற்கு இந்து முண்ணனி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அரசியல் ஆதாயத்திற்காக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியை தடை செய்துள்ளதாக கூறியுள்ளார். 
 
இந்நிலையில் தற்போது பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தமாட்டோம் என இந்து அமைப்புகள் தலைமைச் செயலரிடம் கூறிய பிறகும் சிலை நிறுவி வழிபட தடை விதிக்கப்பட்டது வேதனை தருகிறது. 
 
தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே அரசு தடை போடப்பட்டிருக்கிறது. 1983 க்கு முன்பிருந்தே நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கால சிறப்பு வழிபாட்டை அனுமதிப்பது குறித்து தமிழ்நாடு அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்