கந்தசஷ்டி கவசம் அவமதிப்பு: நாளை மறுநாள் போராட்ட அறிவிப்பு

செவ்வாய், 14 ஜூலை 2020 (21:08 IST)
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களைக் கண்டித்து வீடுகள் தோறும் ஜூலை 16ஆம் தமிழக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார்.
 
இந்த தகவலை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்களும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டில், ‘கருப்பர் கூட்டம் என்கிற இந்து விரோத கூட்டம் கந்த சஷ்டி கவசத்தையும் முருகப்பெருமானையும் ஆபாசமாகப் பேசி விடியோ வெளியிட்ட கூட்டத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி 16.7.20 அன்று காலை 10 மணிக்கு இந்துக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் தர்ணா போராட்டம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதேபோல் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், ’சஷ்டி காலத்தில் லட்சோப லட்ச முருக பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து தமிழ்க் கடவுள் முருகனை தரிசித்து வருகிறார்கள். முருக பக்தர்களை அவமானப்படுத்தும் நோக்கில் சுரேந்திர நடராஜன் போன்ற கும்பல்கள் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். சுரேந்திர நடராஜன் போன்ற கபடதாரிகளை கண்டித்தும், இவரை தேசத் துரோக வழக்கு மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அனைவரும், அவரவர் வீடுகளுக்கு முன்பாக நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முருகப் பெருமான் படத்துடனும், கொடியுடனும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறவழி கண்டனப் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்