ஆவின் அலுவலகத்திலேயே பிறந்தநாள் கொண்டாடலாம்: சூப்பர் அறிவிப்பு..!

வியாழன், 23 மார்ச் 2023 (10:43 IST)
ஆவின் அலுவலகத்திலேயே பிறந்தநாள் கொண்டாட அனுமதி உண்டு என ஆவின் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை உள்படா தமிழகம் முழுவதும் ஆவின் நிர்வாகம் அவ்வப்போது சில அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னையில் முக்கிய ஆவின் பாலகங்களில் 2000 ரூபாய்க்கு மேல் கேக் உள்ளிட்ட ஆவின் தயாரிப்புகளை வாங்கினால் அதே வளாகத்தில் பிறந்த நாளை கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை அம்பத்தூர் சோழிங்கநல்லூர் விருகம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஆவின் பால் அலுவலகங்களில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தலாம் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து ஆவின் பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வசதி விரைவில் தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்