30% சம்பளத்தை தியாகம் செய்யுங்கள்: பாரதிராஜா வேண்டுகோள்!

திங்கள், 19 அக்டோபர் 2020 (11:27 IST)
தமிழ் திரைப்பட நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30% விட்டுக்கொடுக்க வேண்டும் என பாரதிராஜா கோரிக்கை.  

 
கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு 6 மாத காலத்துக்கு மேல் ஆகும் நிலையில் இப்போது மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளோடு திரையரங்குகளை திறந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 
 
ஆனால் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் வராது என்பதால் இப்போது வரை எந்த தயாரிப்பாளரும் தங்கள் படங்களை ரிலிஸ் செய்ய முன் வரவில்லை. இந்நிலையில் எம்ஜிஆர் மகன், களத்தில் சந்திப்போம் மற்றும் இரண்டாம் குத்து ஆகிய படங்கள் மட்டும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
 
அதோடு பல மாதங்களாக சூட்டிங் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது சில வழிநெறிமுறைகளுடன் படபிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30% விட்டுக்கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார். 
 
சினிமாத்துறை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் தயாரிப்பாளர்களுக்கு ஏதுவாகவும் இருக்க தமிழ் திரைப்பட நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30% விட்டுக்கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார். அதாவது, ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் சம்பளத்தை விட்டுதர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்