தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை மேற்பார்வையிட்டு வரும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தினசரி நிலவரங்களை தெரிவித்து வந்தார். ஒருமுறை செய்தியாளர் சந்திப்பின் போது பீலா ராஜேஷ், கொரோனா முதல் நோயாளி பிப்ரவரியிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மற்றொரு முறை மார்ச் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் மர்ம நபர் ஒருவர் அவதூறு பரப்பியுள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் காவல்துறையில் புகார் அளித்தார். அவரின் புகாரை ஏற்ற சைபர் கிரைம் போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர் என்று பதிந்துள்ளனர். மேலும் அந்த நபர் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.